sssssshhhhhh! அப்பா ஒவ்வொரு முறையும் என்ன எழுதலாம் னு ஒரு முடிவுக்கு வறதுக்குள்ள பசு மாடு பண்ணி குட்டி ஆன கதையா போச்சு. இதுல பாக்குறவங்க எல்லாம் இங்கிலிப்பீஸ் எழுத முயற்சி பண்ணுங்க நாங்களும் படிக்கறோம் னு டைலாக் வேற. டேய்..! எனக்கு தமிழ் லையே தப்பு தப்பா தாண்டா எழுத வரும்.. என்ன நம்பாதீங்க டா னு சொன்னா துன்னடக்கம்(ஸாரீ பா thannadakkam னு தான் எழுதணும் னு நினச்சேன்) உள்ள தங்க கம்பி நீங்கனு சொல்றாங்க…போகட்டும் போகட்டும்…உண்மை தெரிய வர அன்னிக்கி ஃபீல் பண்ணுவாங்க!!!!
மேட்டருக்கு வருவோம்…அடப்பாவி அப்ப மேல சொன்னதெல்லாம் என்னடா னு நீங்க கேக்கலாம். நான் முன்னாடி முன்னாடி போகணும் னு நினைக்கறேன் நீங்க பின்னாடி பின்னாடி போறீங்களே (நன்றி தலைவர்). அதெல்லாம் சும்மா பா.. ஆவ்வ்வ்...
என்னுடைய தற்போதைய அவல நிலையை உரைப்பதே இந்த பதிவின் நோக்கம். யாரையும் விமர்சிப்பது அல்ல.தெரிஞ்சோ தெரியாமலோ என்னையும் நம்பி ஒருத்தன் வேலை குடுத்துட்டாண். அதுவும் உனக்கு இருக்கற அறிவுக்கு (அட ஆண்டவா…), நீ சென்னை பட்டினம் ல ஆணி புடுங்க வேணாம். நேரடியா வாஷிங்டன் பட்டினத்துக்கு போனு அனுப்பி வட்சாங்க.
அடப்பாவி அடப்பாவி, அங்க இருந்தப்ப வாவது வேலை ஒண்ணு இருந்ததே டா.. இங்க வந்து அதுவும் போச்சே னு நொந்து நூடல்ஸ் ஆயிட்டு இருந்த ஒரு மதிய நேரம் அது (அது என்றால் இந்த பதிவு போடரதுக்கு ஒரு 5 நிமிசம் முன்னாடி). சரி நாம அனுபவிக்கர இந்த தியான நிலய நாம மட்டும்தான் அனுபவிக்கரோமா இல்ல நம்மள மாதிரி இன்ன பிற மக்கள் இருக்காங்களா னு தெரிஞ்சிக்கவே இந்த பதிவு.
IT துறைல பூந்ததுல இருந்து சூரியன பாக்கற வேலை போச்சு. கௌண்டர் சொல்றது மாதிரி நாம எதுக்கு சூரியன பாக்கணும்? அவளோ அக்கறை இருந்தா சூரியன் என்ன வந்து பாக்கட்டும்னு நிதானமா 8 மணிக்கு எழுதிருச்சி, காலை கடங்கல தவனை முறை ல முடிச்சி ஆஃபீஸ்க்கு வேக வேகமாய் 9 கு போனா… நெறைய வேலை இருக்கும் னு நீங்க நினைக்கலாம்…அப்படி எல்லாம் நீங்க நினைச்சா அந்த நினைப்ப அப்படியே அடி மனசுல போட்டு புதைசுடுங்க.
அடுத்த ப்ராஜெக்ட் ரிலீஸ் கு இன்னும் 1 மாசம் இருக்கறதால இந்த மாசம் முழுவதும், தியான நிலயை அனுசரிக்கணும் னு ஆபீஸ் ல சொல்லிட்டாங்க. அதனால, தினமலர், இந்தியா க்லிட்ஸ் னு ஆரம்பிச்சி ஒரு 11:30 வரை உலக செய்திகளை உள்வாங்கி கொண்டிருப்பேன். சும்மா இருந்தா சோம்பேறி னு ஆத்தா சொல்லி இருக்கு.
அடடா மணி 11:30 ஆச்சே, அம்மணி வீட்டில காத்துட்டு இருக்குமே னு அங்க இருந்து ஆரம்பிச்சி வீட்டுக்கு போய் அம்மணி செஞ்ச அருமையான(அய்யோ அய்யோ) உணவ சாப்புட்டுட்டு மணிய பாத்தா 12:10 தான் ஆகி இருக்கும். புள்ளையாண்டான் கூட கொஞ்ச நேரம் ஆட்டம் போட்டுட்டு ஆஃபீஸ் ல விட்ட வேலைய தொடர 1 மணிக்கு வந்து சேர.
அதுக்கு அப்பறம் ஆரம்பிக்கும் பாருங்க.. தமிழ் மனம் ல பூந்து நேரம் போரதே தெரியாம பூந்து விளையாடீட்டு இருப்பேன். இந்த வேலை பழுவுள சில பல மக்கள் கூட சாட்டிங்க் வேற. இவளோ சீரியஸா வேலை செய்யரப்ப நம்ம பாருக் வந்து மச்சி போலாமா னு கேட்டப்பபறம் தான் மணி 5 ஆச்சு னு தெரியவரும். இதுக்கு மேல இங்க என்ன வேலை. எக்ஸ்ட்ரா டைம் வேலை செயரதுக்கு சம்பளம் எக்ஸ்ட்ரா தாறாங்களா என்ன. உள்ள சம்பளமே ஒழுங்கா தர மாட்டேங்கறாங்க (நன்றி கௌண்டர்).
அங்க இருந்து வண்டி எடுத்து ஐ-405 (அய்யய்யோ ட்ராப்பிக் ல மாட்டி நாளைக்கு தான் வீடு போய் சேர முடியும். அதனால இன்னிக்கி வேற ரூட் ல போலாம்) இல்ல லோகல் ரூட் எடுத்து வீட்டுக்கு போனா, நல்ல தூங்கிட்டு இருக்கற குட்டி பையனா எழுப்பி விட்டு அம்மணிக்கு வேலை வச்சிட்டு ரெஸ்ட் எடுத்தா வரும் சுகம் இருக்கு பாருங்க…அத அனுபவிக்கரவங்களுக்கு தான் தெரியும்…
ஒரு நாள் ரெண்டு நாள் தான அட்ஜஸ்ட் பண்ணிக்கோ னு நீங்க சொல்லலாம். வருசத்துல முக்கவாசி இப்படி தான் போய்ட்டு இருக்கு. சும்மா இருந்து பாரும் சிரமம் புரியும். என்ன மாதிரி சும்மா இருந்து டையர்ட் ஆயிட்டு இருக்கற அனைத்து நல் உள்ளங்களுக்கும் இந்த பதிவு ஒரு சமர்ப்பணம். ஏண்டா உனக்கு வேற வேலையே இல்லயா னு நீங்க கேக்கலாம். கிறுக்கு பைய புள்ள, ஃபுல்லா படிச்சிட்டு கேள்விய பாரு.
Thursday, November 6, 2008
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
IT வந்ததுக்கு அப்பறம் தான் சூரியனைப் பாக்குறத விட்ட மாதிரி பேசக் கூடாது...college day'ல் day scholor ன்கிறதால விடியக்கர்கல்ல வந்தே! weekend ல மதியத்துக்கு முன்னாடி எந்திரிச்சி இருப்பீயா?
மக்கள் அப்பாவிங்கன்னு நல்லவர் மாதிரி நடிக்க கூடாது...
ஆனா வேலை எதுவும் இல்லண்ணே ஒத்துக்கிட்ட உன் தன்னடக்கம் பாராட்டப் பட வேண்டியது.
வாழ்க எம்மான் கோ!
IT nu vandhuta idhellam sagajamappa
aiyaiyo...evana poi nallavanu ninaichene!!!
Post a Comment