Saturday, November 8, 2008

1000

நேத்து நைட் வரை மக்களின் வரவு எண்ணிக்கை 1000 தை தொடலை. அதனால காலைல எழுந்து 1000 நண்பர்களுக்கும் நன்றி சொல்லலாம் னு பாத்தா காலைல 1300 தாண்டி இருந்தது. இது கொஞ்சம் லேட் டான பதிவு தான். ஆனாலும் இதயத்தில் இருந்து.

இதுவரை எழுதிய பதிவுகள் அல்லது பதிவுகள் மாதிரியாணவை - 20.

என்ணயும் மதிச்சி என்னோட பதிவுகள படிச்சது மட்டும் இல்லாம பின்னூட்டம் எழுதிய

கார்த்திக்
செல்வகுமார்
சித்ரா லக்ஷ்மி
ரவிகுமார்
மதங்கி மூமு
தமிழ்நெஞ்சம்
ஹிசுபாஷ்
துளசி கோபால்
பாபு
பழமை பேசி
ஆட்காட்டி
மறவை யூத் க்லப்
கோபாலகிரிஷ்னன் (சிறப்பு நன்றி :))

ஆகிய அத்துணை நல்லுள்ளங்களுக்கும் நன்றி.

பின்னொட்டம் பதியா விடினும் இங்கு வருகை தந்து என்னை ஊக்க படுத்திய அனைவருக்கும் நன்றி. என் எழுத்துகளை எவ்வாறு மேன் படுத்தலாம் என்று அறிய உங்கள் விமர்சனங்களை வரவேர்கிறேன்.

சேவை தொடரும்...

Friday, November 7, 2008

உண்ணாவிரதமும் சில தமாஷ்களும்...

உணர்வை காட்டுகிற உண்ணாவிரதம்தான். இதிலேயும் சில தமாஷ்கள் அரங்கேறின.விஜய் பேசும்போது, இலங்கையில் உடனே போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தனது ரசிகர்கள் பிரதமருக்கு தந்தி அனுப்ப வேண்டும் என்றார். இன்னும் 24 மணி நேரத்திற்குள் குறைந்தது ஒரு கோடி தந்தியாவது அவருக்கு போய் சேர வேண்டும் என்றார். தமாஷ் என்னவென்றால், இவர் பேசியது சனிக்கிழமை பிற்பகலில். மாலை ஆறு மணியோடு பல ஊர்களில் தந்தி ஆபிசை மூடி விடுவார்கள். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. முழு விடுமுறை. இந்த நிலையில் 24 மணி நேர கெடு கொடுத்த விஜயின் யோசனையை எப்படி எடுத்துக் கொள்வது?

ராதாரவியின் பேச்சில் விஜய் பேச்சை விடவும் தமாஷ். ஈழத் தமிழர்களை இலங்கைவாழ் இந்தியர்கள் என்று அழைக்க வேண்டுமாம். அப்படி அழைத்தால் இந்தியா உதவும் என்றார். நல்லவேளையாக பின்னாலேயே பேச வந்த திருமாவளவன், வரலாற்றை எடுத்துச் சொல்லி ராதாரவிக்கு புரிய வைத்தார். இலங்கையை பொறுத்தவரை வந்தேறிகள் என்பது சிங்களர்கள்தான். வேண்டுமென்றால் சிங்களவர்களை ‘இலங்கை வாழ் இந்தியர்கள்’ என்று அழைக்கலாம். ஏனென்றால், இந்திய அரசு அவர்களுக்குதான் மறைமுக உதவி செய்கிறது என்றார் காட்டமாக!

மெயில் ஃபார்வர்ட் ங்க இது.. எனக்கும் விஜய் க்கும் எந்த தனிப்பட்ட முன் விரோதமும் இல்லை.. குற்றம் குறை இருந்தால் மன்னியுங்கள்

இளங்கோவனின் நகைச்சுவை உணர்வு..




வோட்டு போட்டது உங்களுக்கா இல்ல திரைப்பட இயக்குநர்களுக்கா?

வைகோ = கைய்ப்புள்ள

இந்த கதையை சுருங்க சொன்னாலும் 100 வரி வரும் என்பதால் மிகவும் சுருக்கி சொல்லி இருக்கேன்.

இந்திய இறையான்மை குலையும் விதமா பேசிய வைகோ வும் அவை தலைவர் கண்ணப்பனும் கைது செய்ய பட்டனர்.. இது அக்டோபர் 23 அன்று வெளி வந்த செய்தி. நேற்று மாலை இவர்கள் இருவரும் விடுதலை செய்ய பட்டனர்…

இது குறித்து வைகோ அய்யா நீதிபதி அய்யா விடம் கூறியது…

நான் இலங்கை தமிழர் களுக்காக ஆயுதத்தை ஏந்துவேன் என்று சொன்னது வாய் மொழி வார்த்தையே. வாய்மொழி ஆதரவு தெரிவித்து பேசியது குற்றம் ஆகாது. ஆயுதத்தை எடுத்தால் தான் குற்றம் னு அழகா விசயத்தை போட்டு உடைச்சார்.

அருமை அருமை.. இத்தனை நாளா மேடை ல வாய் கிழிய பேசிட்டு, சுத்தி இருக்கறவனயும் ஏத்தி விட்டுட்டு இப்ப பாத்திங்களா மக்களே இவரோட பல்டிய. வடிவேலு range கு சொல்லணும் னா “பேட்சு பேச்சா இருக்கணும்.. கோட்ட தாண்டி நான் போகவே இல்லனு” னு வைகோ கதறி இருக்கார். இந்த சிறை காவல் ல இருந்து தப்பிக்கரதுக்கு இப்படி அந்தர் பல்டி அடிச்ச வைகோ வ என்ன னு சொல்றது. வாய் கோ னு தான் சொல்லணும்.

ஒரு வேலை இவர அரெஸ்ட் செய்யாம இருந்து இருந்தா, இவரோட வார்த்தையை நம்பி பல தொண்டர்கள் கெளம்பி இருப்பாங்க. இலங்கை தமிழர்களுக்கு இத்தனை நாள் ஆதரவ பேசிய ஒரு தலைவன் கைய்ப்புள்ள ஆன கதை இதுவே.

Thursday, November 6, 2008

நீங்களுமா? சங்கதுல சேருங்க !!!

sssssshhhhhh! அப்பா ஒவ்வொரு முறையும் என்ன எழுதலாம் னு ஒரு முடிவுக்கு வறதுக்குள்ள பசு மாடு பண்ணி குட்டி ஆன கதையா போச்சு. இதுல பாக்குறவங்க எல்லாம் இங்கிலிப்பீஸ் எழுத முயற்சி பண்ணுங்க நாங்களும் படிக்கறோம் னு டைலாக் வேற. டேய்..! எனக்கு தமிழ் லையே தப்பு தப்பா தாண்டா எழுத வரும்.. என்ன நம்பாதீங்க டா னு சொன்னா துன்னடக்கம்(ஸாரீ பா thannadakkam னு தான் எழுதணும் னு நினச்சேன்) உள்ள தங்க கம்பி நீங்கனு சொல்றாங்க…போகட்டும் போகட்டும்…உண்மை தெரிய வர அன்னிக்கி ஃபீல் பண்ணுவாங்க!!!!

மேட்டருக்கு வருவோம்…அடப்பாவி அப்ப மேல சொன்னதெல்லாம் என்னடா னு நீங்க கேக்கலாம். நான் முன்னாடி முன்னாடி போகணும் னு நினைக்கறேன் நீங்க பின்னாடி பின்னாடி போறீங்களே (நன்றி தலைவர்). அதெல்லாம் சும்மா பா.. ஆவ்வ்வ்...

என்னுடைய தற்போதைய அவல நிலையை உரைப்பதே இந்த பதிவின் நோக்கம். யாரையும் விமர்சிப்பது அல்ல.தெரிஞ்சோ தெரியாமலோ என்னையும் நம்பி ஒருத்தன் வேலை குடுத்துட்டாண். அதுவும் உனக்கு இருக்கற அறிவுக்கு (அட ஆண்டவா…), நீ சென்னை பட்டினம் ல ஆணி புடுங்க வேணாம். நேரடியா வாஷிங்டன் பட்டினத்துக்கு போனு அனுப்பி வட்சாங்க.

அடப்பாவி அடப்பாவி, அங்க இருந்தப்ப வாவது வேலை ஒண்ணு இருந்ததே டா.. இங்க வந்து அதுவும் போச்சே னு நொந்து நூடல்ஸ் ஆயிட்டு இருந்த ஒரு மதிய நேரம் அது (அது என்றால் இந்த பதிவு போடரதுக்கு ஒரு 5 நிமிசம் முன்னாடி). சரி நாம அனுபவிக்கர இந்த தியான நிலய நாம மட்டும்தான் அனுபவிக்கரோமா இல்ல நம்மள மாதிரி இன்ன பிற மக்கள் இருக்காங்களா னு தெரிஞ்சிக்கவே இந்த பதிவு.

IT துறைல பூந்ததுல இருந்து சூரியன பாக்கற வேலை போச்சு. கௌண்டர் சொல்றது மாதிரி நாம எதுக்கு சூரியன பாக்கணும்? அவளோ அக்கறை இருந்தா சூரியன் என்ன வந்து பாக்கட்டும்னு நிதானமா 8 மணிக்கு எழுதிருச்சி, காலை கடங்கல தவனை முறை ல முடிச்சி ஆஃபீஸ்க்கு வேக வேகமாய் 9 கு போனா… நெறைய வேலை இருக்கும் னு நீங்க நினைக்கலாம்…அப்படி எல்லாம் நீங்க நினைச்சா அந்த நினைப்ப அப்படியே அடி மனசுல போட்டு புதைசுடுங்க.

அடுத்த ப்ராஜெக்ட் ரிலீஸ் கு இன்னும் 1 மாசம் இருக்கறதால இந்த மாசம் முழுவதும், தியான நிலயை அனுசரிக்கணும் னு ஆபீஸ் ல சொல்லிட்டாங்க. அதனால, தினமலர், இந்தியா க்லிட்ஸ் னு ஆரம்பிச்சி ஒரு 11:30 வரை உலக செய்திகளை உள்வாங்கி கொண்டிருப்பேன். சும்மா இருந்தா சோம்பேறி னு ஆத்தா சொல்லி இருக்கு.

அடடா மணி 11:30 ஆச்சே, அம்மணி வீட்டில காத்துட்டு இருக்குமே னு அங்க இருந்து ஆரம்பிச்சி வீட்டுக்கு போய் அம்மணி செஞ்ச அருமையான(அய்யோ அய்யோ) உணவ சாப்புட்டுட்டு மணிய பாத்தா 12:10 தான் ஆகி இருக்கும். புள்ளையாண்டான் கூட கொஞ்ச நேரம் ஆட்டம் போட்டுட்டு ஆஃபீஸ் ல விட்ட வேலைய தொடர 1 மணிக்கு வந்து சேர.

அதுக்கு அப்பறம் ஆரம்பிக்கும் பாருங்க.. தமிழ் மனம் ல பூந்து நேரம் போரதே தெரியாம பூந்து விளையாடீட்டு இருப்பேன். இந்த வேலை பழுவுள சில பல மக்கள் கூட சாட்டிங்க் வேற. இவளோ சீரியஸா வேலை செய்யரப்ப நம்ம பாருக் வந்து மச்சி போலாமா னு கேட்டப்பபறம் தான் மணி 5 ஆச்சு னு தெரியவரும். இதுக்கு மேல இங்க என்ன வேலை. எக்ஸ்‌ட்ரா டைம் வேலை செயரதுக்கு சம்பளம் எக்ஸ்‌ட்ரா தாறாங்களா என்ன. உள்ள சம்பளமே ஒழுங்கா தர மாட்டேங்கறாங்க (நன்றி கௌண்டர்).

அங்க இருந்து வண்டி எடுத்து ஐ-405 (அய்யய்யோ ட்ராப்பிக் ல மாட்டி நாளைக்கு தான் வீடு போய் சேர முடியும். அதனால இன்னிக்கி வேற ரூட் ல போலாம்) இல்ல லோகல் ரூட் எடுத்து வீட்டுக்கு போனா, நல்ல தூங்கிட்டு இருக்கற குட்டி பையனா எழுப்பி விட்டு அம்மணிக்கு வேலை வச்சிட்டு ரெஸ்ட் எடுத்தா வரும் சுகம் இருக்கு பாருங்க…அத அனுபவிக்கரவங்களுக்கு தான் தெரியும்…

ஒரு நாள் ரெண்டு நாள் தான அட்ஜஸ்ட் பண்ணிக்கோ னு நீங்க சொல்லலாம். வருசத்துல முக்கவாசி இப்படி தான் போய்ட்டு இருக்கு. சும்மா இருந்து பாரும் சிரமம் புரியும். என்ன மாதிரி சும்மா இருந்து டையர்ட் ஆயிட்டு இருக்கற அனைத்து நல் உள்ளங்களுக்கும் இந்த பதிவு ஒரு சமர்ப்பணம். ஏண்டா உனக்கு வேற வேலையே இல்லயா னு நீங்க கேக்கலாம். கிறுக்கு பைய புள்ள, ஃபுல்லா படிச்சிட்டு கேள்விய பாரு.

Monday, November 3, 2008

வந்துட்டான் யா வந்துட்டான் யா....!

அக்டோபர் 11 2008, என் வாழ்க்கையில மறக்க முடியாத நாள். என்ன னு கேக்குறீங்களா..? சொல்றேன்.. தேதி சொன்ன உடனே அவசரம். தேதி சொன்னவனுக்கு மீதி சொல்ல தெரியாதா?

அன்னைக்குதான், 24 வயசு ஆனாலும் மனசலவுக்கு சின்ன புள்ளையா இருக்கற இந்த கோப்பிக்கு இன்னொரு சின்ன பையன் பிறந்த நாள். ஹே நான் அப்பா ஆகிட்டேன் அப்பா ஆகிட்டேன் அப்பா ஆகிட்டேன்.

காலைல 7 மணிக்கு ஹாஸ்பிடல் போய், மணி 2:27 PM ஆச்சு குழந்தை பிறக்க. ஆனாலும் நம்ம ஊரு பசங்க ரொம்ப மோசம் பா. கல்யாணம் ஆகி அமெரிக்கா போன அன்னிக்கி இருந்து, குழந்தை பொறந்தா citizen na குழந்தை பொறந்தா citizen na னு கேள்வி கேட்டு ஒரே இம்சை பா. Citizenship என்னோட டார்கெட் இல்லப்பா னு சொன்னாலும் நம்ப மாட்டேங்கறாங்க. அத விடுங்க இது வா முக்கியம்.

Back to the topic. ஒரு வழியா குழந்தை பொறந்தார். அப்படியே மூக்கும் முழியும் அப்பாவே. மூக்கும் முழியும் மட்டுமா. ஜாதகம் கூட. இது வரை ரெண்டு லூசுங்க லூசு தனமா பல வேலைகள் செஞ்சாலும் அது லூசுதனமா தெரியல. ஏன்னா லூசுங்க குள்ள இருந்த அலைவரிசை அப்படி. இப்ப அத கவனிக்க சிங்க குட்டி வந்துட்டான். விடுவமா நாங்க, terror family.

ஆண்டவா இந்த பச்ச புள்ளைய காப்பாத்து.

சொல்ல மறந்துட்டேனே பையன் பேரு ISHANTH.

சும்மா இருந்தா இப்படித்தான்..!

என்னப்பா இது..

ஒரு மாசத்துக்கு மேல ஆகுது. பதிவு போட மேட்டர் சிக்க மாட்டேங்குது. எழுத மேட்டர் தேடினா ரஜினி, இலங்கை தமிழர், ரித்தீஸ் னு இவங்க 3 பேரு மட்டும் தான் தோணுது. வேற ஏதாவது எழுதினாலும் படிக்க மாட்டேங்கறாங்க. ஆஃபீஸ் ல மேயர அளவுக்கு புல்லும் இல்ல.
இப்படி ஏகப்பட்ட சமாச்சாரம் போட்டு வெறுப்ப கெளப்ப இப்ப நான் என்ன பண்றது னு மாதவன் லெவெல் கு ஒரு கேள்வி கேட்டேன். ஆனா பாருங்க கொஞ்சம் சத்தமா கேட்டுடேன். அதுக்காக இப்படியா டா. எல்லாரும் சும்மா இருக்கற வேலைய விட்டுட்டு இப்படியா திரும்பி பாக்குறது. போங்க பா போங்க னு சொல்லிட்டு டாப்பிக் கெடைக்குதானு மறுபடியும் உக்காந்து யோசிக்க ஆரம்பிச்சி இருக்கேன்… நீங்க போய்ட்டு அடுத்த பதிவு போடராப்ப வாங்க.

Friday, September 5, 2008

"பாசக்கார பய புள்ளக"- டாக்டர்ஸ் ஸ்பெஷல்

அறுவைச் சிகிச்சை நடத்து முன்னால் ஏன் மயக்க மருந்து தராங்க தெரியுமா? டாக்டர்கள் பேசிக்கறது உங்களுக்கு காதுல விழக்கூடாதுன்னுதான். உங்க காதுல விழக்கூடாத சமாசாரங்கள் ஒரு பட்டியலே இருக்கு. மாதிரிக்குச் சிலது:

நான் இந்த ஆபரேஷன் பண்ணினதில்லதான். பின்ன எப்பதான் தெரிஞ்சிக்கறதாம்?

யாருய்யா நாயை உள்ள விட்டது? இதய மாற்றத்துக்கு வெச்சிருந்த இதயத்தை தூக்கிட்டுப் போயிடுச்சு. திங்கறதுக்குள்ள வாய்லேருந்து பிடிங்கிட்டு வா.

என்னய்யா, கத்திய இப்படித்தான் இந்த அழுக்குத்தரையில வெச்சுத் தீட்டறதா?

மூடித் தச்சுடாதே. என் மோதிரம் உள்ள விழுந்திடுச்சு. தேடி எடுக்கணும்.

கிட்னி நல்ல காசு. இவனுக்கு ரெண்டு எதுக்கு?

இதை இப்படியே ஒரு அரை மணி நிறுத்திட்டு, அண்ணாமலை தொடரைப் பாத்திடலாமா?

மின்வெட்டா! போச்சு போ. இனிம எப்ப கரண்டு வந்து...

இவன் செக்ஸ் சேஞ்சு ஆபரேஷனுக்கு வரலைன்னு இவ்ளோ லேட்டா சொல்ற!

'சர்ஜரி பார் டம்மீஸ்' புத்தகம் வெச்சிருந்தேனே. இருவத்தெட்டாம் பக்கத்தக் காணும். யாரு கிழிச்சது?

என்ன? மயக்க மருந்து தீந்துருச்சா? அந்தக் கட்டையால மண்டையில தட்டி முழிப்பு வராம பாத்துக்க.

இவனைக் கொளுத்தணுமா, பொதைக்கணுமான்னு கேட்டுக் கையெழுத்து வாங்கினீங்களா?

இந்தப் பயதான் டாக்டர் ஜோக்கு எழுதறவன். இன்னிக்கே இங்கயே ஒரு வழி பண்ணிறலாம்...


இப்படியும் சிலர்..!!

Friday, August 29, 2008

ரித்தீஷின் நாயகன்

செ‌ன்னை பா‌க்‌‌‌ஸ் ஆஃ‌பி‌‌ஸி‌ல் தசாவதாரத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ரித்தீஷின் நாயகன் முந்தியுள்ளது.

வசூலில் தொட‌ர்‌ந்து முத‌லிட‌த்‌தி‌ல் விஷாலின் 'ச‌த்ய‌ம்', இ‌ர‌‌ண்டா‌‌மிட‌த்தில் 'குலேசன்' ஆகியவை நீடித்து வருகின்றன.

கமலஹாசனின் தசாவதார‌த்தை நா‌ன்காவது இட‌த்‌தி‌ற்கு ‌த‌ள்‌ளி, மூ‌ன்றா‌மிட‌த்தை ‌பிடி‌த்து‌‌ள்ளது ஜே.கே.‌ரி‌த்‌தீ‌ஷி‌ன் 'நாயக‌ன்'.

செ‌ன்ற வார இறு‌தி வசூ‌லி‌ல் ரூ.24 ல‌ட்ச‌ங்க‌ள் வசூ‌லி‌த்து, தொட‌ர்‌ந்து ச‌த்ய‌ம் முத‌லி‌ட‌த்தை த‌க்க வை‌த்து‌க் கொ‌‌ண்டு‌ள்ளது. செ‌ன்னை‌யி‌ல் இத‌ன் மொ‌த்த வசூ‌ல் ரூ.1.06 கோடி!

குசேல‌னி‌ன் வார இறு‌தி வசூ‌ல் ஏ‌ற‌க்குறையை ரூ.20.5 ல‌ட்ச‌ங்க‌ள்.இதுவரையான மொ‌த்த வசூ‌ல் ரூ.3.62 கோடி.ர‌ஜி‌னி பட‌ங்க‌ளி‌ல் இது ‌மிக‌மிக குறைவான வசூ‌ல் என்பது கவனத்துக்குரியது.

நாயக‌ன் எ‌ட்டு ல‌ட்ச‌த்து இருப‌த்த‌ி ஏழா‌யிர‌ம் ரூபாயு‌ட‌‌ன் மூ‌ன்றா‌மிட‌த்தை ‌பிடி‌த்து‌ள்ளது. இது பட‌த்‌தி‌ன் மூ‌ன்று நா‌ள் வசூ‌ல் எ‌ன்பது ஆ‌ச்ச‌ரிய‌ம்.

செ‌ன்னை‌யி‌ல் மொ‌த்த வசூ‌ல் ரூ.10.68 கோடியுட‌ன் நா‌ன்கா‌மிட‌த்‌தி‌ல் உ‌ள்ளது 'தசாவதார‌ம்'.

Courtesy: Yahoo!

Wednesday, August 6, 2008

குசேலன்... நானும் கொஞ்சம் சொல்றேன்..




வழக்கம் போல தமிழ் ரசிகர்கள் கிட்ட தனக்கு இருக்கற செல்வாக்க பணம் பண்ணலாம் னு நிரூபிக்க ரஜினி நடித்த படம். ரஜினி முகத்த காட்டினா படம் ஓடிடும் னு எண்ணி ஆரம்பிச்ச படம். நிச்சயம் இந்த படமும் 100 நாள் ஓடும்.. இல்ல இல்ல ஓட்ட படும்.. ரஜினி வெறியர்களால்.

இதை விட பாபா நல்லா இருந்ததாக எனக்கு ஒரு உணர்வு.

1) இசை: பாட்டு ரிலீஸ் ஆகி கேட்டப்ப, எந்த பாட்டும் மனச ஒட்டல. ஆனா வாசு மட்டும் இந்த பாட்டு எல்லாம் பெரிய ஹிட் னு சொல்லி கிட்டார். நல்லா இல்லாத பாட்டும் திரும்ப கேட்க கேட்க ஒரு அளவுக்கு மனச தொட்டுச்சு.

அதுல சிறந்தது: பேரின்ப பேச்சுக்காரன்.

2) நாயகிகள்: சோனா, மீனா, நயந்தாரா. சோனா பேர ஃபர்ஸ்ட் போட்டதுக்கும் ஒரு காரணம் இருக்கு. இவங்க கதா பாத்திரம் மட்டும் தான் கரெக்டா மாட்ச் ஆகி இருக்கு. மத்த எல்லாரும் செயற்கை. அதிலும் நயந்தாரா அம்ம்மம்மா. இந்த படத்துக்கு எதுக்குயா நாயகி? இந்த கதைக்கு எதுக்கய்யா டுயெட்? மடத்தனத்தின் உச்ச கட்டம். மார்க்கெட் வ்யால்யூ வேணும்னா படத்துல என்ன வேனாளும் னு பண்ணலாம் னு அர்த்தமா என்ன? ஏழை பொண்ணு பாத்திரம் கு கொஞ்சமாவது மாட்ச் ஆனாங்களா மீனா ஆன்ட்டி? இதுல வேற மலையாளம் ல பாத்துட்டு ரஜினி அம்மணி கு சிபாரிசு பண்ணாராம். ஏண்டா இப்படி கொள்ளுறீங்க.

3) நகைச்சுவை: வடிவேலு நல்லாதான ஆரம்பிச்சார் படம் ஆரம்பிகரப்ப. போக போக அவரு மட்டும் அழாம நம்மலயும் அழ வசிட்டார். படம் முழுக்க பயங்கர ஜால்ரா. சந்தனம், லிவிந்க்ஸ்டண்(அப்பா எவளோ கஸ்டமா இருக்கு தமிழ் ல டைப் பண்றது),பாஸ்கர்,வையாபுரி னு லிஸ்ட் போட முடியாத அளவுக்கு பெரிய பட்டாளம். அவ்வளவும் குப்பையா பயன் படுத்தி இருக்கார் வாசு. சுத்த வேஸ்ட். இவளோ பேர் இருந்தும் சிரிப்புக்கு பதில் வெறுப்பு தான்.

4) திரைக்கதை: படம் முழுக்க ரஜினிய துரத்துரதே மொத்த கிராமமும் வேலையா பண்றாங்க. இதுல இவங்க அடிக்கற மொக்கை வேற. ரஜினி ரஜினி யா வாரார் னு தான் பேரு. உண்மைதான். எல்லாருக்கும் எட்டா கனி. ஜப்பான் காரங்கல சேர் போட்டு பேசுற தலைவர்.. விடிய விடிய வெளிய கத்துர குரவர்கள காலைல எழுந்து நிதானமா பாக்கறார். இதெல்லாம் கொஞ்ச ஓவரா இல்ல. இதனால அந்த குறவர்கள் இனமே பெருமை படுமாம்.. ஏன்யா இப்படி மக்கள(ரஜினி வெரியர்கள) முட்டாள் ஆக்கறீங்க.

இதுக்கும் மேல திரைக்கதை பத்தி சொல்றது கு ஒண்ணும் இல்ல. ஓட்டைய சுத்தி ஒரு பெரிய கப்பல் கட்டி இருக்காங்க. அவலோதான். ரஜினி காக பெத்த புள்ளைங்க அப்பா பேச்ச கேக்காம இருக்கறது கொஞ்சம் ஓவரா இல்ல. இதுல பொண்டாட்டி வேற.

5) ரஜினி: இனிமே வாழ வைத்த தமிழ் மக்களே னு சொல்லாதீங்க. ரசிகர்களே னு சொன்னவே போதும். படம் ஃபுல்லா நம்மள வீணா ஏத்தி விடராங்களே, அப்படினு கொஞ்சமாவது தர்ம சங்கடம் உங்களுக்கு இருந்ததா? இல்ல 25% மட்டும் தான் நான் னு சொல்லிட்டு 25 மிநிட்ஸ் தவிர எல்லா ஃப்ரேம் லயும் வறீங்களே அதுவாவது ஏன்னு உங்களுக்கு தோணுட்சா? தப்பில்லை உங்க படம் தான். அதுக்கு ப்ரெஸ் மீட் ல யெ ஃபுல் படம் நான்தான் னு சொல்லி இருக்கலாம். பாவம் வெறியர்கள் எத்தன பேரு இதுக்காக வருத்த பட்டிருப்பாக. யோசிங்க ஸார். அவசர பட்டு பேசாதீங்க.

நம்ம ஊருல dolphins இருக்கானே இந்த குசேலன் பாத்து தான் நான் தெரிஞ்சிக்கிட்டேன். அந்த ஊரு ஏறி ல dolphin குதிக்கறது எல்லாம் ரொம்ப ங்க. ரஜினியதான் வெறியர்கள் ஏதுப்பாங்க. அதுக்காக அவங்க பொன்னையும் ஏதுப்பங்களா? ப்ரீயா விடுவோம்..

6) வடிவேலு: 25% வடிவேலு னு இருந்த கொஞ்ச கண்ணியமும் அந்த 25% ல நல்லா கெடுத்துகிட்டார்.

பசுபதி: 50% னு சொன்னாங்க. அத காப்பாத்திகிட்டார். ஆனா மீதி 50% மொக்கை நால இவர் ரொம்ப உழைத்தும் பயன் இல்ல.

8) கதை: சொல்றதுக்கு ஒண்ணும் இல்ல.


மொத்ததுல, ஃப்ரீ யா DVD கிடைச்சா பாருங்கப்பு. அவலோதான் சொல்லிப்புட்டேன். அப்பறம் உங்க விருப்பம்.


பின் குறிப்பு: தன்னோட வயசு தெரிஞ்சதும் சிவாஜி, அமிதாப் னு நடிகர்கள் அவங்க வயதுக்கு ஏத்த கதா பாத்திரங்கல செஞ்சாங்க. அதையும் மக்கள் ரசிட்சாங்க. இத எல்லாரும் உணரனும்.

Tuesday, August 5, 2008

அச்சச்சோ... ச்சீ.. ச்சீ...

நீங்க எத்தனையோ கதைய படிச்சிருப்பீங்க.. இந்த மாதிரி ஆழ்ந்த சிந்தனை உள்ள கதைய படிச்சிருக்க வாய்ப்பே இல்ல... ரீடர்ஸ் டைஜெஸ்ட் ல வெளி வந்து மின்னஞ்சலில் படித்த கதை உங்களுக்காக... மொழி மாறாமல்....

You will laugh your heads off after you finish reading this! (Nice One from Reader's Digest)

One day SHE met a sweet gentleman and fell in love. When it became apparent that they would marry, She made the supreme sacrifice and gave up eating beans.

Some months later, on her birthday, her car broke down on the way home from work. Since she lived in the countryside, she called her husband and told him that she would be late because she had to walk home. On her way, she passed by a small diner and the odor of baked beans was more than she could stand.

With miles to walk, she figured that she would walk off any ill effects by the time she reached home, so She stopped at the dinner and before she knew it, she had consumed three large orders of baked beans.

All the way home, SHE made sure that SHE released all the gas. Upon her arrival, her husband seemed excited to see her and exclaimed delightedly: "Darling I have a surprise for dinner tonight." He then blindfolded her and led her to her chair at the dinner table. SHE took a seat and just as he was about to remove her blindfold, the telephone rang. He made her promise not to touch the blindfold until he returned and went to answer the call. The
baked beans she had consumed were still affecting her and the pressure was becoming most unbearable, so while her husband was out of the room She seized the opportunity, shifted her weight to one leg and let one go. It was not only loud, but it smelled like a fertilizer truck running over a skunk in front of a pulpwood mill. She took her napkin from her lap and fanned the air around her vigorously. Then, shifting to the other cheek, She ripped off three more. The stink was worse than stinking cabbage. Keeping her ears carefully tuned to the conversation in the other room, She went on like this for another few minutes. The pleasure was indescribable for her.

When eventually the telephone farewells signaled the end of her freedom,
SHE quickly fanned the air a few more times with her napkin, placed it on her lap and folded her hands back on it feeling very relieved and pleased with herself. Her face must have been the picture of innocence when her husband returned, apologizing for taking so long.

He asked her if SHE had peeked through the blindfold, and SHE assured him SHE had not. At this point, he removed the blindfold, and twelve dinner guests seated around the table chorused: "Happy Birthday!"

SHE nearly died!

Thanks Readers Digest

நல்லா இருக்கா?

Monday, August 4, 2008

அவன்... அவள்... - 2

கதிரவனும் வந்தான்…

அவன் முகத்தில் பயண களைப்பையும் மீறி பிரகாசமாய் ஒளிர துவங்கிய தருணம் அது. ஆம் பால் வாங்க பிறை எங்கள் வீட்டை கடக்கும் தருணம் அது. ஆனால் அவளை கதிரவன் இன்று பார்ப்பதை நான் விரும்ப வில்லை. இன்று என்ன என்றுமே. எப்படி சொல்வது அவனிடம். வாய் மட்டுமல்ல இமைகளும் அடைத்த படி அவன் முன் நின்றிருந்தேன்.

அவன் என்னை உணரவில்லை. என்னை வழக்கமாய் பார்ப்பது போல் கவனித்துவிட்டு அவளுக்காக தயார் ஆனான். அவள் வரும் தருணம் வந்தது. எப்படி சொல்வேன் இவனிடம். இதனால் வரும் விளைவுகள் என்ன. இவன் துன்புற்றால் இவனது உற்றார் நெஞ்சம் தாங்குமோ?. அவளை கண்டால் எங்கள் நெஞ்சம் தாங்குமோ?

இமை அடைத்து நின்றேன். அருகில் வந்தவன் என் விழி திறக்க ஆயத்த மானான். பிறை வீட்டின் அருகில் வருவதை என்னால் உணர முடிந்தது. பிறையின் வரவு இன்று மேள தாளங்களுடன் மிக விமார்சையாக. வான வேடிக்கைகளின் பிரகாசம் என் விழி வாயிலில் பிரகாசித்தது. என் இமைகளை திறந்து என் வழியே அவளை கண்டான். அங்கேய் பிறை மலர் சூடிய நிலவாய்…மண மகளாய்… மண பிறையாய்….

கதிரவனின் கண்கள் கண்ட காட்சியில் இமை விலகாமல் ஒளி குறையாமல், நீர் மட்டும் பனித்துளியாய், வெப்ப ஆறாய் ஓட துவங்கியது. நான் என்ன செய்ய. நீர் துடைக்க கரம் இன்றி, விழி மட்டும் கொண்ட ஒரு ஜன்னலாய் இறைவன் என படைத்து விட்டானே. என் நம்பனின் கண்ணீர் என் முன்னே கரைந்து ஓடிய தினமே, நான் விழி மூடிய இறுதி நாள் ஆனது. அன்று முதல் ஒளி படரா அறையில் அவளின் நினவுகளுடன் அவனும் விழி மூடிய பாடி நானும்.

Monday, July 21, 2008

அவன்... அவள்... - 1

வழக்கம் போல் இன்றும் என் வேலை தொடங்கியது. எனது வேலை மிக அத்தியாவசியமானது. ஒவ்வொரு மனிதனுக்கும் எனது பணி மிக அத்தியாவசியம். அதனால் என் வேலை எப்பொழுதும் இருக்கும். 24 மணி நேரம் வேலை பலு நிறைந்திருக்கும் ஒரு துறை. எனது நண்பர்கள் 8 மணி நேரம் வேலை செய்து விட்டு வீட்டிற்கு செல்லும் சமயங்களில் என்னை கண்டு செல்வதுண்டு. என் வேலை மனித வாழ்வில் ஒரு அங்காமாவாதால் அவர்களின் பார்வை எனக்கு ஏளனமாகத் தெரியவில்லை. மாறாக எனக்கு பெருமிதத்தை தந்தது.

என் உழைப்பின்றி எந்த ஒரு மனிதனும் அவர்கள் வீட்டில் இருப்பது கொஞ்சம் சிரம்மமே. என் உழைப்பைச் சாராது எந்த ஒரு மனிதனும் இருந்ததில்லை. அப்படி என்ன வேலை செய்கிறாய் என்று நீங்கள் கேக்கலாம். சொல்கிறேன். அதற்கு முன் கேளுங்கள் என் வழி கண்ட காதல் கதையை.

கதிரவன் என்னுடன் வாழ்பவன். அவன் குடும்பமும் என்னுடன் வாழ்ந்து வருகிறார்கள். என் வீடாக இருந்தாலும் அது அவர்கள் வீடாக எண்ணி வாழும் குடும்பம். என் மேல் எப்பொழுதும் ஒரு தனி அக்கறை. ஏனெனில் அவர்களின் பார்வை என் வழி கண்டதே.

பிறை எங்கள் வீட்டின் அருகாமையில் வாழும் ஒரு தேவதை. அவள் வீதியில் வர ஊரே தேர் உலா கண்டு மகிழும் அழகுடையவள். ஆயிரம் மல்லிகை மலர்கள் ஒன்று கூடி கட்டிய ஒரு வசந்த வானவில். ஆவலுடன் பேச தவம் கிடந்தவர் பலர். கதிரவனும் தான்.

கதிரவனுக்கு எப்பொழுதும் அவள் மேல் ஒரு தனி பிரியம். அவளுடன் இன்று வரை ஏதும் பேசியது இல்லை என்றாலும் அவள் தன்னை காதலிப்பதாய் எண்ணி மகிழ்வான். பேசலாம் என்று நினைத்தபோதும் அவளின் பார்வை அவனை ஊமை மொழி மட்டுமே உரைக்க செய்யும். அவளும் ஒன்றும் குறைந்தவள் இல்லை. யார் பார்த்தாலும் தலை நிமிரா வண்ண மயில் இவனை கண்டால் மட்டும் புன்னகை தோகை விரிப்பாள். புன்னகைத்த கணத்தில் என் கண்பட இவன் துடித்த கணங்கள் பல.

காதல் அவன் மனதில் சுடர்விட பூக்களாய் அவன் மலர துவங்கிய காலம் அது .ஆம் வசந்த காலம் போல் அது அவனுடைய காதல் காலம். யாரும் அறியா கனவு காலம்.

என்னை அவனுக்கு மிகவும் பிடிக்கும். அவன் அறையில் நான் தான் சிறந்தவன். எத்தனை நண்பர்கள் என் போன்று இருந்தாலும் எனக்கென அவன் இதயத்தில் எப்பொழுதும் தனி இடம். அவனுடைய கவிதைகள், கதைகள் அத்தனையிலும் நான் அடக்கம் ஒரு நண்பனாய். அவன் காதல் உணர்வுகளின் ஒளியை பலமுறை என்னுடன் பகிர்ந்து இருக்கிறான். அன்றே முடிவு கொண்டேன், என்றேனும் இவனுக்கு தூதாய் நாம் என்று. வருத்தம் இல்லை மாறா குளிர்ந்த புன்னகை.

ஒரு வாரம் கதிரவன் வெளியூர் செல்ல வேண்டிய நிலை. உயிர் நண்பனை பிரியும் சோகம் என்னுள். பிறையை பிரியும் சோகம் அவனுள். நாட்கள் 6 ஆயிற்று. எப்படியும் அவளிடம் பேசி கதிரவனுடன் பேச வைக்க வேண்டும் என்று எண்ணினேன். மாலை சந்திக்க வேண்டும் என்று திட்டம் தீட்டினேன். சாலையை நோக்கி காத்திருந்தேன். அவள் என்னை கடக்கும் தருணம் வந்தது.

தூரத்தில் கண்ட பிறை நிலவின் ஒளியாய் காட்சி தந்தாள். பிரகாசம் கண்ணை கூசினாலும் விழி மூடாமல் அவளை பார்க்க வைத்தது. நானும் மௌனம் ஆனேன். என்னைப் பார்த்து கண் சிமிட்டி சென்றாள். எது எப்படியோ அவள் கதிரவனுக்கு நல்ல துணை என்று அறிந்தேன். என்ன செய்ய. நான் வாய் திறப்பதற்குள் அவள் வீட்டு வாயிலை அடைந்தாள். மறுநாள் அவள் நிச்சயம் என்னை பார்ப்பாள். கதிரவனுடன் சந்திக்கலாம் என்று காத்திருந்தேன். மறுநாளும் வந்தது.. கதிரவனின் வரவால்.

தொடரும்...

Friday, July 18, 2008

இப்பவே கண்ண கட்டுது...

உறுப்படியா இன்னும் ஒரு பதிவு கூட போடல... ஆனா என்னையும் மதிச்சி 100 ஹிட் என் ப்லாகுக்கு கெடசிருக்கு... நல்லா இருக்குய்யா நல்லா இருக்கு.. இதயல்லாம் நெனச்சு மனசு சந்தோசப் பட்டாலும் உள்ள ஏதோ ஒரு சோகம் உருண்டு கிட்டு கெடக்கு... அது என்னானு கேக்குறீங்களா... சொல்றேன்.. அதுக்குள்ள அவசரம்...

நானும் எழுத போறேணு ஆரம்பிச்சி ஏதேதோ எழுத ஆரம்பிச்சேன்... என்ணயும் மதிச்சி அண்ணன் KD இல்ல இல்ல DK ஒரு பின்னூட்டம் வேற போட்டுட்டாரு... அதுக்கு பயந்தாவது ஒழுங்கா எழுதணும் னு யோசிச்சா ஒண்ணும் சிக்க மாட்டேங்குது... கூகல் ல தேடலாம் ணாலும் மனசு எடம் குடுக்க மாட்டேங்குது...

அதனால ப்லாக் எழுதுரெத முழு நேர வேலையா ஆக்கலாம் னு முடிவு பண்ணிட்டேன்... முழு நேரம் உக்காந்தா மட்டும் தோனவா போகுது னு என் வீட்டுக்கார அம்மா கேக்கறது கொஞ்சம் நக்கலா இருந்தாலும்... வேற வழி இல்ல.. எனக்கும் பொழுது போகணும் இல்லயா...

அதனால கண்டிப்பா இன்னும் அதிகமா எழுதுவேன்... யாருப்பா அங்க அலறது. ஓய் என்னா அழுகாக்சு... அழ பிடாது...

நீங்க பாட்டுக்கு படிங்க நான் பாட்டுக்கு எழுதறேன்... என்ன நான் சொல்றது... வரட்டுமா...

Wednesday, July 16, 2008

ஒரு காலடியின் கனவு...



நீ நடக்கும்
ஒவ்வொரு அடியிலும்
நான் உன்னை தொடர்கிறேன்..
என்றேனும்
உன் முகம் காண்பேன் என..

பிறை தேடும்
கதிரவன் போல்...

Monday, July 7, 2008

மகன்

3 மாதங்களுக்கு முன்...

இடம்: சென்னை, தனியார் தொழில்நுட்ப நிறுவனம்

காலை 9 மணிஅலுவலகத்தில் வேகமாய் நுழைந்து அவன் இருக்கை வந்து அமர்ந்தான் அகிலன். அமெரிக்கா வில் இருந்த வேலை நிமித்தமாக வந்த மைல் களைபடித்து முடித்து வேலைக்கு தாயார் ஆனான். அகிலன் தென்காசி அருகெய் உள்ள அந்தியூர் ரை சார்ந்தவன். சென்னை வந்து 2 வருடங்கள் ஆகிறது. ஏழை குடும்பத்தில் பிறந்து இன்ஜினீரிங் படித்து இன்று இந்த நிறுவனத்தில் மாதம் 10000 ரூபாய் வேலை. இவன் குடும்பம் ஒரு வழியாக ஏழை கரையை தாண்டும் நிலை.

காலை 9:30: அதே இடம்

அவனுடைய ப்ராஜெக்ட் லீட் அவரது அறைக்கு அவனை வர சொன்னார். "அகிலா, நம்ம ப்ராஜெக்ட் கு அமெரிக்காக்கு போய் ஒருத்தர் வேலை செய்யணும். இப்ப நம்ம ப்ராஜெக்ட் ல நீதான் கொஞ்சம் நாலெஜ் உள்ள ஆளா இருக்க...ஸொ, நீ இந்த வேலைக்கு அமெரிக்கா போன நல்ல இருக்கும் னு நான் நினைக்கறேன். உனக்கு போக விருப்பமா?" என்றார் மதன். அகிலன் னுக்கு ஒரே ஆச்சரியம். சந்தோஷமும் கூட.

"ஒரு 5 மிநிட்ஸ் ஸார்" என்று சொல்லி விட்டு உடனடியாய் தன்னிடத்துக்கு வந்தான். தொலைபேசி மூலம் தான் கிராம பண்ணையார் வீட்டிற்கு போன் செய்தான். "அய்யா நான் அகிலன் பேசுறேன். எங்க அய்யா அங்க இருக்காரா? இருந்த கொஞ்சம் பேச சொல்றீங்களா" என்று பண்ணையாரிடம் பணிவாய் கோரினான். "இரு அகிலா தரேன்" என்று தோட்ட வேலை செய்து கொண்டிருந்த முருகனை அழைத்தார்... "டே முருகா!!உன் பையன் போன் பண்ணி இருகந்..சீக்கிரம் வா" என்றார்...

குரல் கேட்டதும் முருகன் தடுமாறி தொலைபேசி நோக்கி ஓடினார். "என்னவெய் அகிலா. நல்ல இருக்கியா...என்ன திடீர்னு போனு... உடம்பு சரி இல்லையா கண்ணு" என்று கேள்வி மேல் கேள்வியாய் கவன கூற்றுகளை தொடுத்தார்... "அதெல்லாம் இல்லயா. நான் நல்ல இருக்கேன். என் ஆஃபீஸ் ல என அமெரிக்கா போக சொல்லி இருக்காங்க. அதாம்பா உடனே உனக்கு போன் செஞ்சேன். எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குப்பா... இனிமே நாம யாரும் கஷ்ட பட வேணாம். யப்பா எங்க மேனேஜேர் கூபிடரார். நான் போய் அமெரிக்கா போகறேனு சொல்றேன் பா. சாயங்காலம் மா போன் பண்ணுறேன்" என்று கூறி மேனேஜேர் அரை நோக்கி விரைந்தான்.(போனை துண்டித்து விட்டுதான் :) )

முருகனுக்கு ஒன்றும் புரியவில்லை. "என்னலேய் முருகா. என்னலே விசயம்" என்றார் பண்ணையார். "அய்யா அகிலான வெளியூர் போக சொல்றாங்களாம்" என்றார். "வெளியூர் நா எங்கடா?" என்று மறுபடியும் பண்ணையார் கேட்க "எங்கயோ மெரிக்கா னு சொன்னான். புரியலைங்கய்யா" என்றார் முருகன். "அது மெரிக்கா இல்லடா அமெரிக்கா. உன் பையன் கடல் கடந்து போக போறான். இனிமே உன் குடும்பம் கூலி வேல செய்ய தேவையில்ல." என்றார் பண்ணையார்.... ஒன்றும் விளங்கா விட்டாலும் புன்னகைத்தார் முருகன்.

2 நாட்கள் கழித்து...
இடம்:சென்னை விமான நிலையம்

"கண்ணு... ரொம்ப தூரம் போவ போற. உடம்ப பாத்துக்கு ராசா. தெனத்துக்கு போன் பண்ணு. உடம்ப பாத்துக்கோ" என்று கண்ணீருடன் கூறினார் அகிலனின் தாய். அகிலணும் அம்மா அப்பா வாய் பிரிய முடியாமல் கண்ணீர் சிந்தினான். "சீக்கிரம் வந்துடறேன் அய்யா" என்று கூறி விமான நிலையத்தின் உள் சென்றான். முருகனும் வள்ளியும் உயிர் தங்களை விட்டு விமானம் நோக்கி செல்ல கண்ணீரால் வழி அனுப்பினர்...

இன்று... இடம் : ந்யூ யார்க்

"Akilan your performance had really helped us to clear this project as a defect free one.If you wish you can continue as an employee here. You can earn millions. உன் விருப்பத்தை சொல்லு" என்றார் மேலாளர். அகிலன் இதை எதிர்பார்க்க வில்லை.

"ஸார். என் குடும்பத் விட்டு 3 மாசம் பிரிஞ்சதே ரொம்ப கொடுமையானது. இந்தியா விட்டு வந்த ஒவ்வொரு நொடியும் எப்ப திரும்பி அவங்கள சந்திப்பேனு தான் நினச்சிட்டு இருக்கேன். என்ன பிரிஞ்சி என் அப்பா அம்மா தவிச்சிட்டு இருப்பாங்க. பணம் என் வாழ்க்கையில எப்ப வேனாளும் சம்பாதிக்கலாம். ஆனா என்ன பெட்தவங்கக்கூட நான் செலவு பண்ற ஒவ்வொரு நிமிஷமும் விலை மதிக்க முடியாதது. எனக்கு இங்க இருக்க விருப்பம் இல்ல ஸார்." என்று சற்றும் தயங்காமல் அகிலன் கூறினான். "அகிலா.. உன் வாழ்க்கையில உனக்கு கெடைக்கர பெரிய வாய்ப்பு இது. தவிர்க்காத" என்றார் மேலாளர். ஸார். இங்க நான் சம்பாதிக்கறது எல்லாம் என் குடும்பத்துக்கு தான். ஆனா இங்க இருக்கற ஒவ்வொரு நொடியும் என் தாய் தந்தையோட இருக்கற நேரங்கல நான் இழக்கறேன். நான் அவங்க கூட இருக்க ஆச படரேன் ஸார். என்ன இந்தியா அனுப்ப முடியுமா ஸார் உங்களால?" என்று கண்ணீர் பெருக கோரினான் அகிலன்.

குறள் 0001
அகர முதல எழுத்தெல்லாம்
ஆதிபகவன் முதற்றே உலகு

Saturday, July 5, 2008

மேகம்



இதயம் இன்றி
வாழ இயலாது.
உரைத்தவன் மூடன்!!!

பத்தடி தூரத்தில்
என் இதயம்
சுடிதார் மேகமாய்
நகர்வதை
அவன் அறியான்!!

Friday, July 4, 2008

தொடுவானம்...




அவளை நோக்கிய
என் பயணம்
அவளை சேர்ந்த
பிறகே மீண்டும்
உதயமானது...
முற்றாத துவக்கமாய்...

எனக்கு பிடித்த பாடல்-1

இளைய நிலா....

எனக்கு பிடித்த பாடல்-2

தெய்வம் தந்த பூவே...

Thursday, July 3, 2008

இவனுக்குள்ளயும் என்னமோ இருந்திருக்கு பாரேன்....!!!!

ப்ராஜெக்ட் ரிலீஸ் முடிஞ்சி ஒரு நாள் கூட ஆகல. அதுக்குள்ள வெட்டி ஆபீசர் ஆகிட்டேன். சும்மா இருக்கறது எவளோ பெரிய கஷ்டம். அதுக்கு வளந்த புல்ல புடுங்கலாம். அடுத்த ரெண்டு மாசம் என்னா பண்ணாலாம்னு ப்லாக் பக்கம் போனா!!! அடங்கோய்யாலே...!நம்ம மக்கா எதெ எதெயோ எழுதி வச்சிருக்காங்க.

அடுத்தவங்க படிக்காறங்களா இல்லயானு கொஞ்சம் கூட கவலை இல்ல. இதுக்கெல்லாம் "WHAT IS THE REASON" னு ப்ராஜெக்ட் லீட் எஸ்கேப் ஆன நேரமா பாத்து உக்காந்து யோசிச்சேன். அப்பதான் விடை சிக்குனுச்சு.

என்னானு கேக்கறீங்களா?பல பேருக்கு பல விசயம் தெரியாது. எனக்கோ பல விசயம் புரியாது. புரிஞ்சிக்கலாம்னு தான் பாப்பேன். ஆனா நமக்கு தான் அது என்னனு தெரியாதே. அதனால மண்டி போட்டு உக்காந்து, இனிமே நேரம் கெடைக்கறப்ப தெரிஞ்சி புரிஞ்சி உங்க கிட்டயும் சொல்லலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்.என்னானு கேட்டதுக்கு இவளோ பெரிய இம்சையா னு நீங்க கேக்கலாம்.சும்மா இருக்கரோமில்ல......சொல்லுவோமில்ல....இந்த பதிவு மூலமா நானும் எழுத ஆரம்பிச்சிட்டென். விட மாட்டேன்.

என்னோட பதிவை படிச்சிட்டு உடம்போ மனசோ கெட்டு போச்சுன்னா அதுக்கு நான் பொறுப்பு இல்ல. சும்மா இருக்கறது நான்தான்.பதிவை எழுதரதுக்கு நான் எவளோ கஷ்ட படரேன். படிக்க நீங்க கொஞ்சம் சிரமப்பட்டா என்ன? அழ கூடாது? என்ன நான் சொல்றது. வரட்டா?